20130905

குறுகிய வாழ்நாள் நீண்ட கனவுகள் காண விடுவதில்லை


குறுகிய வாழ்நாள்  நீண்ட கனவுகள் காண விடுவதில்லை
(Vitae Summa Brevis Spem Nos Vetat Incohare Longam)
கவிஞர்: எர்ணெஸ்ட்  டௌசன் (Ernest Dowson . 1867 – 1900)
மொழி : ஆங்கிலம்
நாடு : இங்கிலாந்து
ஆண்டு : 1896
தமிழில் : ஷாஜி


அழுகை ஒன்றும் நீளமானதல்ல
சிரிப்பும் தான்
அன்பு
காதல்
ஆசை
வேட்கை
வெறுப்பு
பகைமை
எதுவும் நம்மிடம் இருப்பதில்லை
நாம் வெளிவாசல் கதவு தாண்டிய பின்
ரோஜா மலர் நாட்கள் நீடிப்பதில்லை
திராட்சை மது நாட்களுக்கும் நீளமில்லை
பனித்திரை மூடிய கனவுக்கு வெளியே
நீண்ட பாதை ஒன்று தோன்றித் திறக்கிறது
கனவுக்குள்ளேயே அது மூடப்படுகிறது


எர்ணெஸ்ட் டௌசன் தனது முப்பத்தி மூன்றாவது வயதில் இறந்துபோனார்