20100921

வாழ்வில் மறக்க முடியாத நிமிடங்கள்

Dear Shaji
Thank you so very much for the highly valuable and sensational meeting.

அரங்கத்தில் இருந்த எந்த நொடியில் எனக்கு மரணம் நிகழ்ந்திருந்தாலும் அதை முழு மனதுடன் ஏற்றுக்கொள்ளும் மனநிலையில் தான் நான் இருந்தேன்..............

மகத்தான கலைஞர்கள் கலந்து கொண்ட விழாவில் நானும் கலந்து கொண்டதற்கு பெருமை படுகிறேன். மலேசியா வாசுதேவன் காலத்தால் அழிக்க முடியாத மாபெரும் கலைஞன். எத்தனையோ பாடல்களை இவர் தான் பாடி இருக்கிறார் என்று தெரியாமலேயே கேட்டுக்கொண்டிருந்த எங்களுக்கு அவரை முழுமையாக உணர வைத்தது உங்கள் கட்டுரை. இந்த நிகழ்ச்சி, வாசுதேவன் அவர்களுக்கு ஒரு புத்துணர்ச்சியை நிச்சயம் தந்திருக்கும்.

எனக்கு பிடித்த எழுத்தாளர் ராமகிருஷ்ணன் அவர்களை சந்திப்பதற்கு உங்கள் நிகழ்ச்சி உதவியது. ஜெயமோகன் , பிரபஞ்சன் எழுத்துக்களை இன்னும் நான் வாசிக்கவில்லை. ஆனால் , கடந்த மாதம் பிரபஞ்சன் பேச்சை ஒரு நிகழ்ச்சியில் கேட்டு இருக்கின்றேன். மிகவும் சுவாரசியமாக பேசினார் , பொருள் படவும் பேசினார், இரண்டு முறையும் . ஜெயமோகன் அவர்களை டிவி -ல் தான் பார்த்து இருக்கின்றேன். மணிரத்னம் இந்த விழாவிற்கு வந்தது , மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.

இசை உயிரில் கலந்தது . இதை , பிரபஞ்சன் , ஜெயமோகன் , ராமகிருஷ்ணன், மணிரத்னம் அப்புறம் நீங்கள் பேசியதிலிருந்து உணரமுடிந்தது. என் வாழ்க்கையை அசை போடுவதாகவே இந்த விழா அமைந்தது . ராமகிருஷ்ணன் போலவே எனக்கும் MGR பாடல்கள் பிடிக்கும். உங்கள் வாசுதேவன் கட்டுரையை படிக்கும் போது மணிரத்னம் எப்படி உணர்ந்தாரோ அதைப்போலவே நானும் உணர்ந்தேன். வாசுதேவன் அவர்கள் இவ்வளவு பாடல்கள் பாடி இருக்கிறாரா என்று ஆச்சரியப்பட்டேன். அவர் தான் பாடி இருக்கிறார் என்று தெரியாமலேயே நிறைய பாடல்களை நான் கேட்டுக்கொண்டிருப்பது அப்போதுதான் புரிந்தது.

மணிரத்னம், "எனக்கு இசையைப்பற்றி ஒன்றும் தெரியாது " என்று சொன்னது , அவரது எளிமையையும் , உயரத்தையும் நமக்குச் சொன்னது.

உங்களது பேச்சு , மற்றவர்கள் பேசியதின் ஒட்டுமொத்த வடிவமாக இருந்தது. சுவாரசியமாகவும் பேசினீர்கள் . அப்பப்போ சாருவையும் இழுத்தீர்கள். மொத்தத்தில் என் வாழ்வில் மறக்க முடியாத தருணமாக இந்த நிகழ்ச்சி அமைந்தது. இவ்வாறாக உங்கள் பணியை தொடருங்கள் உங்களுக்கு எல்லா வகையிலும் நாங்கள் உறுதுணையாக இருப்போம் . இன்னும் நிறைய இசையையும் , இசைக்கலைஞர்களையும் உங்கள் மூலமாக அறிந்து கொள்ள ஆவலாக இருக்கின்றோம். பிரபஞ்சன் சொன்னதைப்போல "இசைக்கலைஞனுக்கு என்றுமே அழிவில்லை ".

SELVA RAJ