20131008

இயல்பாக நடிப்பது - பக் ஓவன்ஸ்

உலக இசைப் பாடல்

இயல்பாக நடிப்பது (Act Naturally)
பாடியவர் – பக் ஓவன்ஸ் (Buck Owens)
எழுதி இசையமைத்தவர்கள் - ஜானி ரசல் மற்றும் வோனி மாரிசன்
பாடல் வகைமை – கண்ட்ரி
நாடு – அமேரிக்க
மொழி – ஆங்கிலம்
ஆண்டு – 1963

தமிழில் - ஷாஜி

அவர்கள் என்னை திரைப்படத்தில் நடிக்க வைப்பார்கள்
என்னை ஒரு பெரும் நட்சத்திரமாக்குவார்கள்
துயரத்தில், தனிமையில் ஒடுங்கிப்போன ஒருவனின் கதை அப்படம்
நான் செய்யவேண்டியதெல்லாம் இயல்பாக நடிப்பது

ஒரு பெரும் நட்சத்திரமாகப் போகிறேன்
சொல்ல முடியாது, ஆஸ்கர் கூடக் கிடைக்கலாம்
ஏன் என்றால் அந்த பாத்திரத்தை மிகச் சிறப்பாக்க என்னால் முடியும்
நான் செய்யவேண்டியதெல்லாம் இயல்பாக நடிப்பது

படம் பார்க்க நீங்கள் வருவீர்கள் என நம்புகிறேன்
அப்போது உங்களுக்குத் தெரியவரும்
அவ்வளவு பெரிய இடத்தை அடைந்த மூடர்களில் முதல்வன் நான்
நான் செய்யவேண்டியதெல்லாம் இயல்பாக நடிப்பது

துயரத்தில், தனிமையில் ஒடுங்கிப்போன ஒருவனின் கதை அப்படம்
கருணைக்காக அனைவரிடமும் மண்டியிட்டு மன்றாடுபவன் அவன்
ஒத்திகைகள் எதுவுமில்லாமல் அதை மிகச் சிறப்பாக்க என்னால் முடியும்
நான் செய்யவேண்டியதெல்லாம் இயல்பாக இருப்பது