பிறந்து விழுந்தவுடன்
உன்னைச் சிறுமைப்படுத்துவார்கள்
எதற்குமே நேரம் தர மாட்டார்கள்
வலியைத் தவிர உன்னால்
எதுவுமே உணரமுடியாது
வ் நீ உழைக்கும்
வர்க்க நாயகன் ஆவது சிறந்தது
நீ உழைக்கும் வர்க்க
நாயகன் ஆவது சிறந்தது
வீட்டில் உன்னை
புண்படுத்துவார்கள்
பள்ளியில் உன்னை
அடிப்பார்கள்
நீ புத்திசாலியென்றால்
உன்னை வெறுப்பார்கள்
நீ முட்டாள் என்றால்
உன்னை இழிவுபடுத்துவார்கள்
நீயோ மகா கிறுக்கன்
அவர்கள் சொல்லிக்
கொடுப்பதை உன்னால் செய்யவே முடியாது
நீ உழைக்கும் வர்க்க
நாயகன் ஆவது சிறந்தது
நீ உழைக்கும் வர்க்க
நாயகன் ஆவது சிறந்தது
இருபதாண்டுகாலம் உன்னை வதைத்து பயமுறுத்தியவர்கள்
நீ வேலை செய்து
சம்பாதிக்க வேண்டும் என்று கட்டளையிடுவார்கள்
பயத்தால் உறைந்து போன
உன்னால் இயங்கவே முடியாது
நீ உழைக்கும் வர்க்க
நாயகன் ஆவது சிறந்தது
நீ உழைக்கும் வர்க்க
நாயகன் ஆவது சிறந்தது
மதத்தில், காமத்தில்,
தொலைக் காட்சியால் நீ மயங்கிக் கிடப்பாய்
நான் புத்திசாலி, சுதந்திரமானவன்,
வர்க்கங்கள் அற்றவன் என்று
உன்னை நீயே எண்ணிக்
கொள்வாய்
ஆனால் நீ ஒன்றுக்கும்
உதவாத ஓர் உழவன் என்பதை நானறிவேன்
நீ உழைக்கும் வர்க்க
நாயகன் ஆவது சிறந்தது
நீ உழைக்கும் வர்க்க
நாயகன் ஆவது சிறந்தது
மேல்த் தட்டில் நிறைய
இடமுண்டு நண்பா
ஆனால் புன்னகைத்து
கழுத்தறுக்கும் வித்தை உனக்குக் கைகூடவேண்டும்
மலைகளில் மாண்டுபோகும்
மனிதர்களில் ஒருவனாவதே உனக்கு நன்று
நீ உழைக்கும் வர்க்க
நாயகன் ஆவது சிறந்தது
நீ உழைக்கும் வர்க்க
நாயகன் ஆவது சிறந்தது